Post

Share this post

தீவிர புயலாக மாறியது ‘மாண்டஸ்’

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது.
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் புதுசேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாமல்லபுரத்தில் நாளை இரவு கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது. இதனால் பலத்த காற்றுடன் கரையோர மாவட்டங்கள் கனமழையைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக இதுவரை 17 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment