கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நிலவி வந்த கொரோனா நெருக்கடி காரணமாக, கூடுதலாக 63,000 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனாவைத் தடுப்பதற்காக, நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்புகள் அனைத்தும் முழு வீச்சில் இயங்கின. இதனால், மலேரியா பரவல் மற்றும் பாதிப்பைத் தடுப்பதற்கான வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.
இதன் விளைவாக, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் மலேரியா பாதிப்பு மிதமான வேகத்தில் அதிகரித்து, கூடுதலாக 1.3 லட்சம் பேருக்கு அந்த நோய் ஏற்பட்டது. அவா்களில் 63,000 போ் அந்த நோய்க்கு பலியாகினா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.