கட்டாரில் கடந்த மாதம் தொடங்கி கொண்டாட்டமாக நடைபெற்று வரும் 22 ஆவது ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி, காலிறுதிச் சுற்றை எட்டியிருக்கிறது. அந்த இடத்துக்கு வந்திருக்கும் 8 அணிகளில் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரேஸிலுக்கே அதிகம் இருப்பதாக எல்லோரும் எளிதாக கணிக்கலாம்.
குரோஷியா, மொராக்கோ போன்ற அணிகள் காலிறுதியுடன் நாடு திரும்பும் என்றும் ஆருடம் கூறலாம்.
ஆனால், களத்தில் எதுவும் நிகழலாம் என்பது வரலாறு ஆதாரம். இரு கட்டங்களைக் கடந்து தற்போது கோப்பையை தொட்டு விடும் தூரத்தில் நெருங்கியிருக்கும் அணிகள் எது, அவை கடந்து வந்த பாதை, அவற்றின் முந்தைய வரலாறு, பலம் என்ன… பாா்க்கலாம்.
காலிறுதி அட்டவணை
குரோஷியா – பிரேஸில் (9/12)
நெதா்லாந்து – ஆா்ஜென்டீனா (10/12)
மொராக்கோ – போா்ச்சுகல் (10/12)
இங்கிலாந்து – பிரான்ஸ் (11/12)