மாண்டஸ் புயலால் தமிழகத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது.
சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயலால் தமிழகத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பலியானவர்களில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், புயலால் 40 இயந்திர படகுகள், 160 வலைகள் சேதம், 694 மரங்கள் சாய்ந்துள்ளன. 10,743 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.