Post

Share this post

பாலியல் புகார் – நடிகரிடம் விசாரணை!

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’ஸ்குவிட் கேம்’ இணையத் தொடரில் நடித்த நடிகர் மீது பாலியல் புகார் விசாரணை நடத்தப்படவுள்ளது.
’ஸ்குவிட்’ தொடரில் நடித்த நடிகர் ஓ இயங் சோ(78) மீது கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் புகார் அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த அதிகாரிகள் அவர் குற்றவாளி இல்லை என அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், பாலியல் புகாரை அளித்த பெண் மீண்டும் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதனால், விரைவில் ஓ இயங் சோ மீது விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஸ்குவிட் கேமில் ‘பிளேயர் 001’ என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்த ஓ இயங் சோவுக்கு சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment