சென்னை திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் பரிந்துரையை ஏற்று வரும் 14 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி பதவியேற்கவுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.
இளைஞர் நலத் துறை செயலாளரான உதயநிதி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு மற்றும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்துதல் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.