நடிகையின் காலுக்கு முத்தம் – பிரபல இயக்குநர்!

நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படத்தை இயக்குவார். இவர் கரோனா காலத்தில் 18+ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டு பிரபலமானார்.
அவர் இயக்கிய படத்தில் அதிகமான ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றச்சாட்டுக்கு உள்ளானார். ஆனாலும் அவர், எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களையே எடுத்து வருகிறார்.
தற்போது ராம்கோபால் வர்மா, ‘டேஞ்சரஸ்’ எனும் இரு பெண்கள் காதலிக்கும் லெஸ்பியன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், ‘டேஞ்சரஸ்’ படத்தை விளம்பரப்படுத்தும் விடியோவில், நடிகை அஷு ரெட்டியின் காலில் முத்தமிடும் காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு சமூக வலைதளங்களிலில் பலர் கேலி செய்துவந்தனர்.