2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் மினி ஏலத்திற்கு 405 பேர் ஏலப்பட்டியலில் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 23 ஆம் திகதி கொச்சியில் மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ள மினி ஏலத்தில் 405 வீரர்கள் பெயர்கள் தேர்வாகியுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கிறது. இதில் 273 பேர் இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். 10 அணிகளும் சேர்ந்து 87 வீரர்களை வாங்க முடியும்.
மினி ஏலத்தில் ஒவொவொரு அணிக்கும் மீதமுள்ள பணத்தின் மதிப்பு :
சிஎஸ்கே – ரூ. 20.45 கோடி, மும்பை இந்தியன்ஸ் – ரூ. 20. 55 கோடி, எல்.எஸ்.ஜி. – ரூ. 23. 35 கோடி, பஞ்சாப் – ரூ. 32. 2 கோடி, ஹைதராபாத் – 42.25 கோடி, தில்லி கேப்பிடல்ஸ் – ரூ. 19.45 கோடி, குஜராத் டைட்டன்ஸ் – ரூ. 19.25 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் – 13.2 கோடி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – ரூ. 7.05 கோடி, ஆர்சிபி – ரூ. 8.75 கோடி.