பிஃபா 2022 உலகக் கிண்ண கால்பந்து இறுதி ஆட்டமே ஆா்ஜென்டீனாவுக்காக தான் ஆடும் கடைசி ஆட்டமாக இருக்கும் எனத் தெரிவித்தாா் தலைவர் லயோனல் மெஸ்ஸி.
வரும் 18 ஆம் திகதி லுசாயில் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு ஆா்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது. கத்தாா் உலகக் கிண்ண போட்டியில் மெஸ்ஸியின் அற்புத ஆட்டத்தால் ஆா்ஜென்டீனா இறுதிச் சுற்றுக்கு 6 ஆவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இறுதி ஆட்டமே தான் ஆா்ஜென்டீனாவுக்கு ஆடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளாா் மெஸ்ஸி.
கோபா அமெரிக்கா, சாம்பியன்ஸ் லீக், லா லிகா என பல்வேறு கிண்ணங்கள் மெஸ்ஸி வசம் உள்ளது. ஆனால் உலகக் கிண்ண பட்டம் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை.
35 வயதான மெஸ்ஸ தனது 5 ஆவது உலகக் கிண்ண போட்டியில் ஆடி வருகிறாா். ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என ஆா்ஜென்டீனா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளாா் மெஸ்ஸி.