Post

Share this post

டி20 இல் மோசமான சாதனைப் படைத்த அணி

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சிட்னி தண்டர் அணி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பிக்பாஸ் டி20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 13 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
அதில் நாணயசுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்டு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் 140 ஓட்டங்கள் இலக்குடன் விளையாடிய சிட்னி தண்டர் அணி, அடிலெய்டு அணியின் அபார பந்துவீச்சு காரணமாக 5.5 ஓவர்களில் 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை சிட்னி அணி பெற்றது.

Leave a comment