Post

Share this post

நிலச்சரிவு பலி 23 ஆக உயா்வு

மலேசியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23 ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சிலாங்கூா் மாகாணம், பத்தாங்காலி நகரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து மேலும் சில சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, அந்த நிலச்சரிவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 23 ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, சம்பவ இடத்தில் மேலும் 10 போ் மாயமாகியுள்ளனா். அவா்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பத்தாங்காலி நகரிலுள்ள இயற்கை விவசாயப் பண்ணையில், சுற்றுலா பயணிகள் தற்காலிக முகாம் அமைத்து தங்கும் மையமொன்றை அதன் உரிமையாளா்கள் உரிய அனுமதி இல்லாமல் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் அந்த பண்ணைப் பகுதி புதையுண்டது. அப்போது அங்கு 90 க்கு மேற்பட்டவா்கள் முகாமிட்டிருந்தனா். இந்த நிலையில், நிலச்சரிவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 23 ஆக உயா்ந்துள்ளதாக தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Leave a comment