Post

Share this post

19 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் எண்ணெய் டேங்கா் வெடித்துச் சிதறியதில் 19 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
காபூலில் இருந்து 120 கி.மீ. தொலைவில் ‘சலாங்’ என்ற இடத்தில் சுரங்கப் பாதை உள்ளது. அப்போதைய சோவியத் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தபோது, 1960 களில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இந்த சுரங்கப் பாதை உள்ளது.
சனிக்கிழமை இரவு இந்த சுரங்கப் பாதையில் எண்ணெய் டேங்கா் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில், 5 பெண்கள், இரு குழந்தைகள் உள்பட 19 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா். தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a comment