Post

Share this post

இலங்கையில் 26,000 பேருக்கு வேலை வாய்ப்பு!

நாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் உத்தரவின் பேரில் இடம்பெறும் இந்த பரீட்சையை அடுத்து 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர மேலும் 6,000 கல்வி பீடத்தில் பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Leave a comment