Post

Share this post

இலங்கையில் பெரும் நஷ்டத்தில் 52 நிறுவனங்கள்!

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐம்பத்திரண்டு பிரதான அரச நிறுவனங்கள் பெருந்தொகை நஷ்டத்தை சந்தித்து வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட 52 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல் படி ஒரு வருடத்தில் இந்த அரசு நிறுவனங்களால் ஏற்பட்ட இழப்பு 86,000 கோடி ரூபாய் என்றும், 2021 ஆம் ஆண்டில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட மொத்த இழப்பை விட அதிகம் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், 420 அரச நிறுவனங்கள் அரசால் பராமரிக்கப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அரச நிறுவனங்களில் முப்பத்திரண்டு ஊழல் நிறைந்த நிறுவனங்கள் உள்ளதாக கோப் குழு அண்மையில் தெரிவித்திருந்தது.
அந்த அறிக்கையின் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 32 நிறுவனங்களின் இழப்பு 46,500 கோடி ரூபாய் எனவும், அந்த நிறுவனங்களில் பெட்ரோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபை என்பன அதிகளவு நஷ்டம் அடையும் நிறுவனங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் ரூ.62,800 கோடி நஷ்டம் அடைந்துள்ளதுடன்,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரூ.24,800 கோடியும், மின்சார சபை ரூ.4,700 கோடியையும் இழந்துள்ளன.
இதற்கிடையில், நஷ்டத்தில் இயங்கும் 39 அரசு நிறுவனங்கள் மறுசீரமைப்பு பட்டியலில் இருப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment