Post

Share this post

நடுராத்திரியில் இப்படி நடந்து!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. இவர் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
காஜல் பசுபதி தொடர்ந்து படங்களில் நடித்து வந்த போது நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையால் விவாகரத்து பெற்றனர்.
இதை தொடர்ந்து விஜய் டிவி ஒளிபரப்பும் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இவர் அங்கிருந்து சில நாட்களிலேயே வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த காஜல் பல தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” என்னுடைய நெருங்கிய நண்பரிடம் நான் உதவி கேட்டேன். அவனுக்கு ஒரு தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவரை நன்றாக தெரியும், அதனால் நான் அவனிடம் சீரியல்களில் எதும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டேன்.”
”அவன் சில நாள் கழித்து நடுராத்திரியில் போன் செய்தான். அப்போது என்னிடம் தவறான முறையில் ஆபாசமான கேள்விகளை கேட்டான். நண்பனே இப்படி பேசியது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது” என்றார்.

Leave a comment