Post

Share this post

1.64 லட்சம் தற்கொலைகள்!

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021 ம் ஆண்டில் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 164,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்டவர்கள், அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்ட மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசு அறிக்கையில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021 ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment