வியாழனுக்குச் சொந்தமான தனுசு ராசியில் புதன் டிசம்பர் 31-ம் திகதி வக்ர நிலையில் நுழைவார். ஜனவரி 18, 2023-ல் அவர் இயல்பு நிலைக்கு மாறுவார். பின்னர் பெப்ரவரி 7-ம் திகதி மகர ராசிக்குள் நுழைவார்.
புதனின் இந்த சஞ்சாரங்களால் புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழப்போகும் 4 ராசிக்காரர்கள்.
மேஷம்: புதன் பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளித் தருவார். 2023 புத்தாண்டில் புதனின் ராசி மாற்றமும், புதனின் வக்ர பெயர்ச்சியும் பல நன்மைகளைப் பெற்று மகிழலாம்.
தொழிலில் நல்ல வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கும் அருமையான காலம் இது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண வரவு மிகவும் சாதகமாக இருக்கும்.
ரிஷபம்: புதனின் ராசி மாற்றமும், புதனின் வக்ர பெயர்ச்சியும் ரிஷப ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். தடைபட்ட வேலைகள் சாதகமாக முடியும். சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம், பணியில், பதவி உயர்வு, சம்பள உயர்வு என நிம்மதியான காலகட்டமாக புதன் பெயர்ச்சி இருக்கும்.. கடின உழைப்பின் முழு பலன்களையும் புதன் பகவான் தருவார்.
சிம்மம்: புதன் கிரகம் சிம்ம ராசிக்கு மிகவும் சுப பலன்களைத் தருவார். வியாபாரிகளுக்கு லாபமான காலகட்டம் இது. பண வரவு சாதகமாக இருக்கும் என்பதோடு, வாழ்க்கைத் துணை அமையும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி இது. பரம்பரை சொத்து தொடர்பாக இருந்த பிரச்சனைகள் தீரும்.
கன்னி: புதனின் வக்ர பெயர்ச்சியும், புதனின் ராசி மாற்றமும், கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும். வீடு, வாகனம் வாங்க திட்டமிட்டால், அது வெற்றி பெறும்.
சொத்து முதலீடு லாபம் தரும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். நெருங்கியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பமாக சுற்றுலா செல்லலாம்.