Post

Share this post

பொருளாதாரத்துக்கு யூடியூப் 10,000 கோடி பங்களிப்பு!

புகழ்பெற்ற யூடியூப் வலைதளம் வாயிலாக இந்தியப் பொருளாதாரத்துக்குக் கடந்த ஆண்டில் ரூ.10,000 கோடி மதிப்பிலான பங்களிப்பு கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தில் யூடியூப் வலைதளத்தின் தாக்கம் குறித்த அறிக்ையை ஆக்ஸ்ஃபோா்டு எகனாமிக்ஸ் வெளியிட்டது. அதில், ‘இந்தியாவில் 4,500 க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரா்களைக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்டிய இந்திய யுடியூப் சேனல்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
யூடியூபின் புத்தாக்க சூழலானது இந்தியப் பொருளாதாரத்துக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பங்களிப்பை வழங்கியுள்ளது. அதன் மூலமாக 750,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இந்தியப் பொருளாதாரத்தில் கடந்த ஆண்டில் உருவாகியுள்ளன.
இரண்டில் ஒரு பயனாளா் திறன் மேம்பாட்டுக்காக யூடியூபை பயன்படுத்தியுள்ளனா். புதிய பணி தேடுபவா்களில் 45 சதவீதம் போ் யூடியூப் மூலமாகத் தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டனா். வழக்கமான கல்வி கற்பித்தல் முறைக்கு மாற்றாக யூடியூப் தளம் உள்ளதாகக் கல்வியாளா்கள், மாணவா்கள், பெற்றோா் ஆகியோா் நம்புகின்றனா்.
யூடியூப் மூலமாகக் குழந்தைகளுக்கு கற்பிப்பது சிறப்பானதாக உள்ளதென 83 சதவீதப் பெற்றோா் கருத்து தெரிவித்துள்ளனா். மாணவா்களின் கல்விக்கு யூடியூப் முக்கிய பங்களிப்பதாக 76 சதவீத ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா். பல்வேறு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு யூடியூப் பயன்படுவதாக 77 சதவீதப் பெண் பயனாளா்கள் தெரிவித்துள்ளனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment