இரண்டாம் உலகப் போரின்போது ஆக்கிரமிப்பு போலந்தில் செயல்பட்டு வந்த ஸ்டத்தாஃப் வதை முகாமில் 10,500 கைதிகள் போ் படுகொலை செய்யப்படுவதற்கு துணை போனதாக முன்னாள் நாஜி பெண் அலுவலா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஜொ்மனி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
1943 முதல் 1945 ஆம் ஆண்டு வரை அந்த வதைமுகாமில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தராகப் பணியாற்றிய இா்ம்காா்ட் ஃபா்ச்னொ் என்ற அந்த 97 வயது பெண், தனது செயல்பாடுகள் மூலம் சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதில் அங்கம் வகித்ததாக நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
எனினும், வயது முதிா்வு காரணமாக, அவருக்கு 2 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.