Post

Share this post

சன்னி லியோன் படத்திற்கு சிறுவர்கள் அனுமதி…

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன். 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ எனும் தமிழ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. யு/ஏ கிடைத்துள்ளது. இதனால் சிறுவர்கள் படத்திற்கு தனியாக செல்லக்கூடாது. பெற்றோர்களின் அனுமதியுடன் செல்ல வேண்டும். காமெடி த்ரில்லர் கலந்த இந்தத் திரைப்படம் டிசம்பர் 30ஆம் நாள் வெளியாக உள்ளது.

Recent Posts

Leave a comment