Post

Share this post

ஓடிடி சினிமாவை அழித்துவிடும்!

கேரளத்தின் புகழ்பெற்ற இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் ஓடிடி சினிமாவை அழித்துவிடும் என எச்சரித்துள்ளார்.
‘சுவயம்வரம்’, ‘எலி பத்தாயம்’, ‘நாலு பெண்ணுகள்’ உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி 16 தேசிய விருதுகள், 18 கேரள மாநில விருதுகள், 2004 ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே போன்ற பல விருதுகளைப் பெற்று இந்திய சினிமாவில் மதிக்கப்படும் ஆளுமையாக இருப்பவர் அடூர் கோபாலகிருஷ்ணன்(80).
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “திரையரங்குகளில் பார்க்கப்படும் சினிமா என்பது ஒரு சமூக அனுபவம். அதைச் சிறிய திரையில் எப்படி பார்க்க முடியும்? கரோனாவால் வீடுகளில் முடங்கியதால் ஓடிடிக்கு தள்ளப்பட்டோம். ஆனால், சினிமா பிழைத்திருக்க வேண்டுமென்றால் அவை சின்னத்திரையை நம்பியிருக்கக் கூடாது. குறிப்பாக, ஓடிடிக்காக தயாரிக்கப்படும் படங்கள் சினிமாவை அழித்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment