Post

Share this post

கதறிய அஷீம் – கட்டி அணைத்த விக்ரமன்! (வீடியோ)

பிக் பாஸ் போட்டி 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், மனமுடைந்து அழும் அஷீமை, விக்ரமன் கட்டியணைத்த விடியோ வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை 10 வாரங்களை கடந்துள்ள நிலையில், சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஷி, ராம், ஆயிஷா, ஜனனி ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு மக்களிடமிருந்த குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு இரண்டாவது வாரத்திலேயே விலகினார்.
இந்நிலையில், 11வது வாரத்தை பிக் பாஸ் எட்டியுள்ள நிலையில், இந்த வார பள்ளி காலத்திற்கு திரும்பிச் செல்லும் ‘கனா கானும் காலங்கள்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆசிரியர்கள் ஏழு மாணவர்கள் வீதம் தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என மூன்று பாகங்களாக டாஸ்க் பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போட்டியாளர்கள் கடந்த கால நினைவுகளை பகிரும் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் சோகமான நினைவுகளை பகிர்ந்து வந்தனர்.
அஷீம் தனது மகனுக்காக எழுதிய கடிதத்தை படிக்கும்போது கதறி அழுத நிலையில், அருகிலிருந்த விக்ரமன் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
விக்ரமனுக்கும், அஷீமுக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில், இன்றைய நிகழ்வு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ப்ரோமோவை சமூக ஊடகங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Recent Posts

Leave a comment