ஆண்டின் இறுதியில், நவகிரகங்கள் அனைத்திலும் இறுதியாக நடைபெறவிருப்பது புதன் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சி.
புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதனின் வக்ர சஞ்சாரத்தால் சிலருக்கு நன்மைகள் என்றால், சிலருக்கு நேரம் மோசமாகும்.
2022, 31 டிசம்பர் நள்ளிரவு 12:58 மணிக்கு இந்த பெயர்ச்சி நடைபெறும் என்பதால், புதனின் இந்த பெயர்ச்சி, 2022 ஆம் ஆண்டின் இறுதி பெயர்ச்சியாகும்.
தனுசு ராசியில் புதன் வக்ர பெயர்ச்சியாக சஞ்சரிப்பதன் தாக்கம், 12 ராசிகளிலும் எதிரொலிக்கும்.
புதன் வக்ர பெயர்ச்சியால் பாதிப்படையும் ராசிகள் இவை தான் :
மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் புதன் வக்ரப் பெயர்ச்சி இது. தொழில் மற்றும் பணியில், போட்டியாளர்களிடமிருந்து எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.
ஈகோ தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன், தூக்கத்தைக் கெடுக்கலாம், சிலருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். கவனமாக இருந்தால், நல்லது நடக்கும்.
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்திற்கு ஆதாரமான வேலையில் சிக்கலை ஏற்படுத்துவார் புதன். புதன், தனுசு ராசியில் வக்ரம் ஆவதால், வேலையில் தாமதம், எதிர்பார்த்த பதவி உயர்வு தள்ளிப்போவது என மன வருத்தம் ஏற்படும். காதலர்கள் பிரிந்து போகும் சூழல்களும் வரலாம்.
கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு பணிச்சுமையும், அழுத்தமும் அதிகரிக்கும். வேலை இடத்தில் தடைகளும், வாக்குவாதங்களும் அதிகரிக்கும்.மன அழுத்தத்துடன் இருக்க வேண்டியிருக்கலாம்.
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்காக அதிக சிக்கல்களை சநதிக்க வேண்டியிருக்கும். படிப்படியாக தாயின் ஆரோக்கியம் மேம்படும். தந்தையுடனான உறவு மோசமடைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளின் கல்வியில் சற்று அக்கறை காட்ட வேண்டி இருக்கும் உடல்நலம் குறித்து கவனம் தேவை. குழந்தைகளுக்கு உடல் பிரச்சனைகள் வரலாம் எச்சரிக்கையாக இருக்கவும்.