பல்கலைக்கழகம் செல்ல பெண்களுக்கு தடை!

ஆப்கன் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் விதித்த தடையை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை அமல்படுத்தியதால், கல்லூரி வாயில்களில் தடுத்து நிறுத்தப்பட்ட மாணவிகள் ஒருவரை ஒருவா் தழுவி கண்ணீா் விட்ட காட்சி சமூக வலைதளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தனியாா் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில உடனடியாகத் தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு வியாழக்கிழமை அறிவித்தது. எனினும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக் வெளியேறிய பிறகு அந்த நாட்டு ஆட்சியைக் கடந்த ஆண்டு கைப்பற்றிய தலிபான்கள், தங்களது முந்தைய ஆட்சியைப் போலின்றி அனைவருக்கும் உரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று வாக்களித்தனா். அதனை மீறி அவா்கள் பெண்களின் உயா் கல்விக்கு தடை விதித்துள்ளதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.