Post

Share this post

தேர்வைப் புறக்கணித்த மாணவர்கள்!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கத் தடைவிதித்த தலிபான் ஆட்சியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் மாணவர்கள் பல்கலைக் கழக தேர்வுகளைப் புறக்கணித்தனர்.
பெண்களைப் படிக்க அனுமதிக்க வலியுறுத்தி தேர்வறையிலிருந்து ஆண் மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர். சில பேராசிரியர்களும் பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பணிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தற்போது பெண்கள் கல்லூரி பயில ஆப்கன் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கன் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் விதித்த தடையை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை அமலுக்கு கொண்டுவந்தனர்.
இந்நிலையில், இன்று பல்கலைக் கழக தேர்வுகளை ஆண் மாணவர்கள் புறக்கணித்து தேர்வறையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பெண்களை தலிபான்கள் படிக்க அனுமதிக்க வலியுறுத்தி அனைத்து மாணவர்களும் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறினர்.
இதேபோன்று பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலரும், பெண்கள் படிக்கக்கூடாது என்ற தலிபான் ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு எதிராக தங்கள் பணிகளை ராஜிநாமா செய்தனர்.
பல்கலைக் கழக தேர்வறை வாயிலில் அனுமதி மறுக்கப்பட்டு திரண்டிருந்த மாணவிகளுக்கு ஆதரவாக, ஆண் மாணவர்கள் தேர்வறையிலிருந்து வரிசையாக வெளியேறினர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a comment