இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவான திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார்.
இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது.
இந்நிலையில், நடிகர் ரஜினியின் 171 வது படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் கைவிடப்படுவதாகவும் அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் ரஜினியை இயக்கவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.