Post

Share this post

நடிகர் விஜயகுமாருக்கு என்ன ஆச்சு?

விஜயகுமார் உடல்நிலை பற்றி பரவும் வதந்திக்கு அருண் விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். அவரது மகன் அருண் விஜய் தற்போது கோலிவுட்டில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர்.
விஜயகுமார் படங்களில் நடிப்பதை சமீப காலமாக குறைத்துக்கொண்டார். டிவி சீரியல்கள், படங்களை என குறைந்த அளவு ரோல்களை தான் ஒப்புக்கொள்கிறார்.
இந்நிலையில் விஜயகுமாருக்கு உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக சமீபத்தில் செய்தி பரவியது. அது பற்றி அருண் விஜய் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
“நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களே.. அப்பா நல்ல உடல்நலத்துடன் வீட்டில் தான் இருக்கிறார். அதனால் வதந்தியை நம்பாதீர்கள். உங்கள் அன்பு மற்றும் அக்கரைக்கு நன்றி” என குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a comment