தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் 10 பேர் விளையாடி வருகின்றனர்.
மேலும் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் இருந்து வருகின்றது. காரணம் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை ஏற்றும் போட்டியாளர்களும் உள்ளார்கள்.
எனவே யார் அதிக ஓட்டுகள் பெற்று உள்ளே இருக்கப்போகிறார், குறைவான வாக்கு பெற்று வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் குழம்பி வந்தார்கள்.
சனிக்கிழமை நிகழ்ச்சியில் படப்பிடிப்பு இன்று நடந்துள்ளது, அதைப்பற்றி ஒரு விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.
அத்தோடு பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது தனலட்சுமி தானாம், இது உறுதியான தகவல். ரசிகர்கள் இவர் வீட்டைவிட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை.