பிரான்ஸ் கால்பந்து அணியின் மிட்பீல்டரான பிளேய்ஸ் மட்டூடி (35) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா்.
கடந்த 2018 இல் உலகக் கிண்ண செம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாா் மட்டூடி. நிகழாண்டு சீசனில் இன்டா் மிலன் அணியில் மட்டூடி சோ்க்கப்படவில்லை. பிஎஸ்ஜி அணியில் ஆடி லீக் 1 பட்டத்தையும், இத்தாலியின் ஜுவென்டஸில் ஆடி சீரி ஏ பட்டங்களையும் வென்றுள்ளாா்.
பிரான்ஸ் அணிக்காக 84 முறை ஆடியுள்ளமட்டூடி 9 கோல்களை அடித்துள்ளாா். கால்பந்தில் இருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என அவா் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளாா்.