Post

Share this post

17.50 கோடி ஐபிஎல் சம்பளம்!

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 17.50 கோடிக்கு மும்பை அணியால் தேர்வு செய்யப்பட்டார் அவுஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்டில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது. இந்த டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் 67 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பிறகு கைல் வெரைனும் யான்செனும் ஜோடி சேர்ந்து சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தினார்கள். வெரைன் 52, யான்சென் 59 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்கள். தென்னாப்பிரிக்க அணி 68.4 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேம்ரூன் கிரீன் 5 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு கேம்ரூன் கிரீன் பேட்டியளித்ததாவது :
ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வாக நான் ஒன்றும் செய்யவில்லை. ஏலத்தில் என் பெயரைக் கொடுத்தேன். அது தானாக நடைபெற்றுள்ளது. நான் எப்படிப்பட்டவன், என்ன மாதிரி சிந்திக்கிறேன், என் நம்பிக்கை என எதையும் ஐபிஎல் சம்பளம் மாற்றிவிடாது. ஏலம் முடிந்த பிறகு அணி வீரர்களின் உதவியுடன் டெஸ்ட் ஆட்டத்தில் கவனம் செலுத்தினேன் என்றார்.

Leave a comment