Post

Share this post

30,000 அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!

இலங்கையில் இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வு பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கமைய, அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின்படி எதிர்வரும் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சில் 800 வெற்றிடங்கள் உள்ளதாகவும், விரைவில் இதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டு வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment