Post

Share this post

கணவனின் கழுத்தில் கத்தி – மனைவி மீது பாலியல் துஷ்பிரயோகம்!

யாழ்ப்பாணத்தில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்.நகரை அண்டிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இரவுவேளை வீடொன்றினுள் அத்துமீறி கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த மூவர் வீட்டில் இருந்த கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் அபய குரல் எழுப்பவே வீட்டினுள் நுழைந்த மூவரும் அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ள நிலையில் இருவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment