ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிப்பார், பாராளுமன்றம் 2025 வரை நீடிக்கும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எம்மை தவிர்த்து தனித்து போட்டியிடுவதே சிறந்த முடிவு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் அவர்களுக்கு, 100 முதல் 200 எம்.பி.க்கள் கிடைத்தால் அவர்கள் திறமைசாலிகள் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.