Post

Share this post

’பொன்னியின் செல்வன் 2’ வெளியீடு! (வீடியோ)

பொன்னியின் செல்வன் 2 வது பாகம் ஏப்ரல் 28 ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி உலகெங்கிலும் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் மற்ற பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும், இப்படத்தை அடுத்தாண்டு (2023) ஏப்ரல் 28 ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment