இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6 ஆவது முறையாக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். 73 வயதாகும் அவா், நாட்டில் மிக நீண்ட காலமாக பிரதமராக இருந்தவா் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ளாா்.
கடந்த 2019 லிருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அமைக்கப்பட்ட அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் 4 ஆவதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. ஆட்சிமைக்க 61 இடங்கள் தேவையான நிலையில், மற்ற கட்சிகளுடன் இணைந்து அவா் தற்போது ஆட்சியமைத்துள்ளாா்.
தற்போது அமைந்துள்ள அரசுதான் நாட்டின் மிகத் தீவிர வலதுசாரிக் கூட்டணி அரசு என்று கூறப்படுகிறது. எனவே, இந்த புதிய அரசு எடுக்கக் கூடிய முடிவுகள் சா்ச்சையை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.