Post

Share this post

2022 இல் சினிமாவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்!

ஜனவரி 21 : சர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்திய ‘ஜெய்பீம்’ படம் ஆங்கிலம் அல்லாத அயல்மொழித் திரைப்படப் பிரிவில் மதிப்புமிக்க கோல்டன் குளோப்ஸ் 2022-க்கான படமாக நுழைந்தது.
மார்ச் 20 : நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி, பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை மீண்டும் கைப்பற்றியது. 23.6.2019-இல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டன.
மார்ச் 25 : எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான “ஆர் ஆர் ஆர்’ படத்துக்கு இந்தியா முழுமையும் எதிர்பார்ப்பு எழுந்தது.
ஏப்ரல் 14 : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த நடிகை அலியா பட் – பாலிவுட் நடிகர் ரண்வீர் கபூர் திருமணம் நடைபெற்றது.
ஏப்ரல் 15 : கன்னடத்தில் உருவாகி “பான் இந்தியா’ படமாக வெளியான “கேஜிஎஃப் 2′ இந்திய சினிமாவில் புது சாதனை படைத்தது. வசூல் ரீதியாக இந்திய சினிமாவில் புது அத்தியாயம் உருவாக்கியது.
ஏப்ரல் 19: நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமணம் நடைபெற்றது.
ஜூன் 9: நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.
ஜூலை 22 : 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றில் சுதா கொங்கரா இயக்கிய “சூரரைப் போற்று’ திரைப்படம் 5 விருதுகளையும், வசந்த் எஸ் சாயின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் 3 விருதுகளையும் மடோன் அஸ்வினின் “மண்டேலா’ திரைப்படம் 2 விருதுகளையும் பெற்றன.
செப்டம்பர் 30 : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகி, ரூ. 500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
அக்டோபர் 4 : அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாய் வழங்கினர்.
அக்டோபர் 28 : நடிகர் ஹரிஸ் கல்யாண், நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நவம்பர் 12 : கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் “80 ஸ் ரீயூனியன்’ நடைபெறவில்லை. இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மும்பையில் அனைவரும் சந்தித்தனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர்.
நவம்பர் 28: நடிகர் கௌதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெற்றது.
டிசம்பர் 1 : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் எல்.எம். முரளிதரன் (65) மாரடைப்பு காரணமாக காலமானார்.
டிசம்பர் 5 : நடிகை ஹன்சிகா தனது நீண்ட கால நண்பர் சோஹலை மணந்து கொண்டார்.
டிசம்பர் 24 : எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய “ஆர் ஆர் ஆர்’ படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றது.

Leave a comment