Post

Share this post

கனடா, அவுஸ்திரேலியாவுக்கு கட்டுப்பாடுகள்!

சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் விமானப் பயணத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என கனடாவும், அவுஸ்திரேலியாவும் அறிவித்துள்ளன.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டிலிருந்து வருவோருக்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்கெனவே கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அந்த வரிசையில் இப்போது கனடாவும், அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளன.
சீனா, ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகள் தங்கள் பயணத்துக்கு இரு நாள்கள் முன்னதாக கரோனா பரிசோதனை செய்து ‘நெகடிவ்’ சான்றிதழுடன் வர வேண்டும். இந்த நடைமுறை ஜன. 5 ஆம் திகதிமுதல் அமலுக்கு வரும் என அவுஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கனடாவும் இதேபோன்ற நடைமுறை ஜன. 5 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை சீனா நடைமுறைப்படுத்தியிருந்தது. இதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, டிசம்பா் மாதம் பல்வேறு கட்டுப்பாடுகளை சீனா தளா்த்தியது.
மேலும், ஜன. 8 ஆம் திகதிமுதல் சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அந்த நாடு முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால், அங்கு கொரோனா பரவல் இப்போது அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a comment