இயக்குநர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை 2006 இல் திருமணம் செய்து 2010இல் விவாகரத்து செய்தார். பின்னர் கீதாஞ்சலி ராமனை 2011இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார். தற்போது மோகன் ஜி. இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ளது. செல்வராகவன் ட்விட்டரில் அடிக்கடி பதிவிட்டு வருவார். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு , “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு சிலர் ‘உண்மைதான்’ எனவும், சிலர் ‘என்னாச்சி சார், நீங்களும் விவாகரத்து செய்யப்போறீங்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி கீதாஞ்சலியுடன் புகைப்படத்தினைப் பதிவிட்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் செல்வராகவன்.