இந்தியாவின் டெல்லியில் புத்தாண்டு இரவில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக காரில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருகையில், டெல்லி சுல்தான்புரி பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது இருச்சக்கர வாகனத்தில் வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார்.
அதிகாலை நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது ஒரு மாருதி பொலேனோ காருடன் அவரது இருச்சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது எனினும் அந்த காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர்.
அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை காரில் சிக்கியுள்ளது. விபத்தை பொருட்படுத்தாது கார் நிற்காமல் சென்றதால், பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை அந்த இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் ஒருவர் அதிகாலை சுமார் 3 மணி அளிவில் காவல்துறைக்கு புகார் தந்துள்ளார்.
எனினும் விபத்தை ஏற்படுத்திய கார் வேகமாக சென்றதால் வாகனத்தை கண்டுபிடிக்க இயலாமல் போயுள்ளது. பின்னர் காவல்துறைக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அந்த நபர் கஞ்சவாலா பகுதியில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று நிர்வாணமாக கிடப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியதுடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் காரை பறிமுதல் செய்தனர்.
காரில் சென்ற தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மித்துன், மனோஜ் மிட்டல் என 5 பேரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் புத்தாண்டில் டெல்லியில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.