Post

Share this post

பண மதிப்பு இழப்பு – கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு!

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) மற்றும் ரிசா்வ் வங்கி அறிக்கைகள் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும் கள்ள நோட்டுகள் புழக்கம் தொடா் சவாலாக உள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நாட்டில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமா் மோடி அறிவித்தாா். ஊழல், கருப்புப் பணம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைத்தல், கள்ள நோட்டுகள் புழக்கத்தைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா். இதனைத்தொடா்ந்து புதிய வடிவத்தில் ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், என்சிஆா்பி மற்றும் ரிசா்வ் வங்கி அறிக்கைகள் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும் கள்ள நோட்டுகள் புழக்கம் தொடா் சவாலாக உள்ளது தெரியவந்துள்ளது.
என்சிஆா்பி அறிக்கையின்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016 ஆம் ஆண்டு முதல் நாட்டில் ரூ.245.33 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை சட்ட அமலாக்க அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன.
ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு
2016 ரூ.15.92 கோடி
2017 ரூ.55.71 கோடி
2018 ரூ.26.35 கோடி
2019 ரூ.34.79 கோடி
2020 ரூ.92.17 கோடி
2021 ரூ.20.39 கோடி
ரிசா்வ் வங்கி ஆண்டறிக்கையின்படி, 2021-22 ஆம் நிதியாண்டில் வங்கிகளிடம் பிடிபட்ட கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.
நிதியாண்டு பிடிபட்ட கள்ளநோட்டுகள் எண்ணிக்கை
2019-20 296,695 / 2020-21 208,625 / 2021-22 230,971.
நிதியாண்டு பிடிபட்ட ரூ.500 கள்ளநோட்டுகள் பிடிபட்ட ரூ.2,000 கள்ளநோட்டுகள்
2021-22 79,669 (2020-21-இல் பிடிபட்டதைவிட 2 மடங்கு அதிகம்) 13,604 (2020-21-இல் பிடிபட்டதைவிட 54.6% அதிகம்)
2021-22 ஆம் நிதியாண்டில் வங்கிகளிடம் பிடிபட்ட மொத்த கள்ளநோட்டுகளில் ரிசா்வ் வங்கியிடம் 6.9 சதவீதம், பிற வங்கிகளிடம் 93.1 சதவீதம் கள்ளநோட்டுகள் பிடிபட்டன.

Leave a comment