நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது.
அஜித்தின் 61 வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் டிச. 31 மாலை 7 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. நேற்று படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக படக்குழு அறிவித்தது. ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள்.
தணிக்கை குழு 10க்கும் மேற்பட்ட ஆபாச வார்த்தைகளை மியூட் செய்திருக்கிறார்கள். வடக்கன்ஸ் என்ற வார்தையைக் கூட மியூட் செய்திருக்கிறார்கள். மொத்தம் 13 இடங்களில் மாற்றம் செய்துள்ளனர்.
இதனால் படம் மங்காத்தா மாதிரி இருக்குமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்குமென ரசிகர்கள் காத்து வருகின்றனர்.