பிரிட்டனிலிருந்து மியான்மா் விடுதலை பெற்ன் 75 ஆவது ஆண்டுவிழாவையொட்டி, 7,012 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் புதன்கிழமை அறிவித்தாா்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தப்படும் என்று சுதந்திர தின உரையின்போது அவா் வாக்குறுதி அளித்தாா்.
மியான்மரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் திகதி கலைத்தது.