Post

Share this post

வெளியானது வாரிசு டிரைலர்! (வீடியோ)

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ’வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24 ஆம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.
வாரிசு திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பணிகள் முடிவடையாததால் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது.

Leave a comment