Post

Share this post

ஸ்ருதி ஹாசனுக்கு மீண்டும் காய்ச்சல்!

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
தற்போது பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாகும் இரண்டு பெரிய படங்களில் ஸ்ருதி ஹாசன்தான் கதாநாயகி. பாலகிருஷ்ணாவுடன் ‘வீர சிம்ஹ ரெட்டி’, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘வால்டர் வீரய்யா’ படத்திலும் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஸ்ருதி ஹாசன் சிரஞ்சீவி படத்தின் புரமோஷனில் கலந்துக் கொள்ளவில்லை. இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
கடந்தாண்டு ஜூலை மாத்ததில் தனது சமூக வலதளப் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவைப் பகிர்ந்து பிசிஒஎஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்களில் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர். இந்நிலையில் மீண்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். நேற்றைய தினத்தின் அன்புக்கு அனைவருக்கும் நன்றி. இருந்தும் என்னால் மிகப்பெரிய வெளியீட்டு விழாவிற்கு வர முடியாதது மிகவும் வருத்தமாக உள்ளது. ரெஸ்ட் எடுத்து வருகிறேன். விரைவில் குணமடைந்துவிடுவேன். ரசம் மட்டுமே அதிகமாக சாப்பிடுகிறேன்” என பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Recent Posts

Leave a comment