Post

Share this post

சூரிய பெயர்ச்சி – அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிக்காரர்கள்!

நவக்கிரகங்களில், ஆத்மகாரகனான சூரியனுடன், புதன் சேர்வதால் ஏற்படும் யோகம் புதாதித்ய யோகம் உருவாகிறது. ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் இணைந்திருந்தால், புத – ஆதித்ய யோகம் ஏற்படும்.
மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி போன்ற ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால், புதாதித்ய யோகத்தின் நற்பலன்கள் கிடைக்கும்.
புதனின் ராசி மாற்றங்கள் :  தற்போது, வக்ர நிலையில் தனுசு ராசியில் உள்ள புதன் பகவான், ஜனவரி 02 ஆம் திகதி அஸ்தமனமாகினார். அஸ்தமன நிலையில் 2023 ஜனவரி 13 ஆம் திகதி வரை இருக்கப் போகும் புதனால், தற்போது சிலருக்கு நன்மைகள் கிடைக்கலாம்.
ஆனால், ஜனவரி 18 ஆம் திகதி தனுசு ராசியில் மீண்டும் புதன் சென்று, அங்கும் சில நாட்கள் இருந்துவிட்டு, பிப்ரவரி 7ம் திகதி மகர ராசிக்கு செல்வார் புத பகவான்.
நிலை மாறும் புதனின் தாக்கம் : இப்படி நிலை மாறும் புதனின் பெயர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் பாதித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மை ஏற்படும்.
துலாம்: விருச்சிக ராசியில் புதன் மற்றும் சூரியன் இணைவதால் உருவாகும் புதாதித்ய யோகம், துலாம் ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த லக்னத்தின் இரண்டாம் வீட்டில், பேச்சாற்றல் மற்றும் செல்வ வளம் ஆகியவை அமையும். திடீரென பணம் வந்துக் கொட்ட்டும்.
தொழிலில் வெற்றியைப் பெறுவீர்கள். சூரியனின் செல்வாக்கு துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் வெற்றியைத் தரும்.
அதேபோல், வாக்குக்காரகரான புதனின் அருளால், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கல்வி, ஊடகம், சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரம் அமையும்.
மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு, மங்கள யோகமான புதாதித்ய யோகமானது, தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றியைத் தரும். பல்வேறு பக்கதில் இருந்து பணம் வந்துக் குவியும்.
தொழிலில் நல்ல ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் இந்த புத்தாதித்ய யோகம் என்பது மகிழ்ச்சியைத் தரும்.
மீனம் : புத்தாதித்ய ராஜயோகம் மீனத்தின் ஒன்பதாம் வீட்டில் உருவாகும், இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு நாட்டுத் தொடர்புக்கான வீடாக கருதப்படுகிறது.
இந்த நேரத்தில், நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். தொழில் அலல்து பணியின் நிமித்தம் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
தற்போது செய்து வரும் வேலையில் பதவி உயர்வு பெறலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் பிரச்னை ஏதேனும் இருந்தால், அதற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும். சூரியனின் தாக்கத்தால் சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும், அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பதவி கிடைக்கலாம்.

Recent Posts

Leave a comment