Post

Share this post

தொடர்ச்சியாக இரு சதங்கள் – கோலி முன்னேற்றம்!

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்த பிரபல பேட்டர் விராட் கோலி, ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
குவாஹாட்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 113 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். வருடக் கடைசியில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்தார். இதற்கடுத்து விளையாடிய ஒருநாள் ஆட்டத்திலும் இலங்கைக்கு எதிராகச் சதமடித்தார்.
இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் இரு இடங்கள் முன்னேறி 6 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. ரோஹித் சர்மா 8 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் தலைவர் பாபர் ஆஸம் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். அடுத்த 4 இடங்களில் வான் டர் டுசென், இமாம் உல் ஹக், குயிண்டன் டி காக், வார்னர் ஆகியோர் உள்ளார்கள். இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் 15 வது இடத்தில் உள்ளார்.

Recent Posts

Leave a comment