நடிகர் ரஜினிகாந்த் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்க உள்ளார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அப்படத்தில் ரஜினி அதிக தாடியுடன் இஸ்லாமியராக நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் படம் என்பதால் ரஜினி இதில் பயிற்சியாளராக நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.