இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2 – 1 என வென்றது இந்திய அணி. ஒருநாள் போட்டியில் ஏற்கனவே 2 – 0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெறும் 3 வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உம்ரான் மாலிக், ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். தலைவர் ரோஹித் சர்மா 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் 116 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 85 பந்துகளில் சதத்தினை நிறைவு செய்தார். தற்போது 44 ஓவர் முடிவில் 108 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 46 சதங்களுடன் இரண்டாமிடத்திலும் ரிக்கி பாண்டிங் 30 சதங்களுடன் 3வது இடத்திலும் இருப்பது குறிப்பிட்டத்தக்கது.
இந்திய அணி 44 ஓவருக்கு 313/ 2 ரன்கள் எடுத்துள்ளது. விராட் -108*, ஸ்ரேயஷ் ஐயர் – 37*