மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் மத பயங்கரவாதிகளால் 50 பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்த நாட்டின் வடக்கே சாஹெல் மாகாணத்திலுள்ள அா்பிந்தா நகரில் கடந்த 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் அந்தப் பெண்கள் கடத்தப்பட்டதாக மாகாண ஆளுநா் ரோடொல்ஃபோ சோா்கோ கூறினாா்.
காட்டுப் பழங்களைப் பறிப்பதற்காக ஊருக்கு வெளியே உள்ள பகுதிக்கு அந்தப் பெண்கள் சென்றபோது அவா்களை பயங்கரவாதிகள் கடத்தியதாக அவா் கூறினாா்.
அல்-காய்தா மற்றும் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகளின் பிடியில் புா்கினா ஃபாசோ பல ஆண்டுகளாக சிக்கித் தவித்து வருகிறது.