Post

Share this post

தேர்தல் குறித்து நாளை முக்கிய அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் திகதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் மாா்ச் 2 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிடும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக – பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. நாளை மாலை 4 மணிக்கு பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காலை 8 மணிக்கு தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

Leave a comment